திருவாரூர்- திருச்சிக்கு அரவைக்கு 1000டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூர் : திருவாரூரில் இருந்து நேற்று திருச்சி மாவட்டத்திற்கு பொது விநியோகத் திட்டத்திற்காக ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காரிப் பருவத்தின் போது 8 லட்சம் மெட்ரிக் டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி நடப்பாண்டில் குறுவை நெல்களும் கொள்முதல் நடைபெற்றுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகளில் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மாவட்டத்தில் இருந்து வரும் 26 நவீன அரிசி ஆலைகளுக்கு அரவைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் வெளியூர் மாவட்டத்தின் பொது விநியோகத் திட்டத்திற்காக நெல் மற்றும் அரவை செய்யப்பட்ட அரிசி மூட்டைகளும் ரயில் மூலம் அவ்வப்போது அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பொது வினியோகத் திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரம் டன் நெல் மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்