திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேர விண்ணபிக்கலாம்

நாகப்பட்டினம்,ஜூலை 3: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் வரும் 19ம்தேதி மாலை 5 மணி வரை www.tncu.tn.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைவரும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருககு 1.8.2024ல் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டும ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 இணைய வழி மூலமாக செலுத்த வேண்டும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சான்றுகளில் சுய ஒப்பமிட்டு திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விளமல், திருவாரூர்-610 004 என்ற முகவரிக்கு அஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், பயிற்சிக்கான கட்டணமாக ரூ.18,750 இணைய வழி செலுத்த வேண்டும் என நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கு.த.சரவணன் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்