திருவாரூர் கள்ளச் சாராயம் காய்ச்சியவர் கைது 200 லிட்டர் ஊறல் அழிப்பு

 

திருத்துறைப்பூண்டி, செப்.6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி சேவியக்காடு பகுதியில் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் கார்த்திகா, திருத்துறைப்பூண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் கடந்த 2ம் தேதி இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேவிக்காடு மருத்துவமனை தெரு பகுதியில் வசிக்கும் பரமசிவம் (50) என்பவரது வீட்டில் எரி சாராயம் காய்ச்சியுள்ளார். மேலும் 2 பேரல்களில் தலா 100 லிட்டர் சாராய ஊறல்கள் போட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பரமசிவம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். மேலும் 2 லிட்டர் எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர். பரமசிவத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி