திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பதை தவிர்க்க வேண்டும்

 

திருவாரூர். மே 28: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மருத்துவமனை நிலைய மருத்துவரிடம் மனு அளித்தனர்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் ராமச்சந்திரன், நிலைய துணை மருத்துவர் அருண்குமார் ஆகியோரிடம் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசாத், மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட இணை செயலாளர் லெனின் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதனால் கழிவுநீர் ஆற்றில் கலந்து வருகிறது. இதனை தவிர்த்து சுத்திகரிப்பு நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும். கழிவுநீர் நேரடியாக ஆற்றில் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அவசர பிரிவில் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன எடுப்பதற்கு 1 மாதம் வரை காலதாமதம் ஆகிறது. அதுமட்டுமல்லாமல் எடுத்த ஸ்கேன் அறிக்கை வருவதற்கும் 1மாத காலதாமதம் ஆகிறது. இதனை துரிதப்படுத்த வேண்டும். எம்ஆர்ஐ ஸ்கேன் புதிதாக அமைத்து செயல்பாட்டுக்கு வந்தாலும் முறையாக ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை, முறையாக ஆட்களை நியமித்து 24 மணிநேரமும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் சுற்றி இருக்கும் கழிவுகளை உடனடியாக ஆகற்றி தொற்று நோய் பரவாமல் இருக்கும்படி வழிவகை செய்ய வேண்டும். மேற்கண்ட அனைந்து கோரிக்கைகளையும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்