திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: கலெக்டர் ஆய்வு

திருவாரூர் : திருவாரூரில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூரில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக இன்றைய தினம் (நேற்று) மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் நிலையில் 1,023 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு பணிகள் குறித்து ழுமுமையாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி கமிஷனர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்….

Related posts

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது