திருவானைக்காவல் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற 30 இந்து முன்னணியினர் கைது

 

திருச்சி, ஜூலை 22: திருவானைக்காவல் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து கோயில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படவே, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரங்கம் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Related posts

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்