திருவாடானை பகுதிகளில் பழமை வாய்ந்த வழிபாட்டு ஸ்தலங்கள் சுற்றுலாத்தலங்கள் ஆக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

திருவாடானை, நவ.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகா மிகவும் தொன்மை வாய்ந்த கிராமங்களை கொண்டதாக உள்ளது. அதற்கு ஆதாரமாக ஏராளமான கல்வெட்டுக்களும், பழமை வாய்ந்த கோயில்களும் இங்கு நிறைய உள்ளன. திருவாடானையில் 1000 ஆண்டுகள் பழமையான ஆதிரத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. 9 நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயில் பாண்டிய ஸ்தலம் 14ல் எட்டாவது சிவ தலமாகும்.

இதேபோன்று அருகிலுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என மதங்கள் கடந்து நேர்த்திக்கடன் வைத்து அது நிறைவேறியவுடன் வந்து சாமி தரிசனம் செய்துவரும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்களும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி