திருவாடானை அருகே மண் சாலையாகி விட்ட தார்ச்சாலை: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

 

திருவாடானை, ஆக.22: திருவாடானை அருகே சம்பூரணி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு பொது மயானம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயானத்திற்கு என பல ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் மிகவும் மோசமாக கற்கள் அனைத்தும் பெயர்ந்து விட்டது. இதனால் சாலை இருந்த சுவடு தெரியாமல் மண் சாலையாக மாறி விட்டது.

இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் மழை காலம் வந்து விட்டால் இறந்தவர் உடலை தூக்கிச் செல்லும்போது பேருந்து கிடந்த கற்களையும் கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் சேறும் சகதியாக உள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் சாலையை சீரமைக்க வில்லை என்கின்றனர். எனவே இந்த பொது மயான சாலையை உடனடியாக மீண்டும் தார்ச்சாலையாக அமைத்து தரவேண்டுமென சம்பூரணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்