திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்

திருவாடானை, மே 9: திருவாடானை அருகே வீழிமாத்தூர் பகுதியில் தங்கராஜ் என்பவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற மர்ம நபர் யாரோ ஒருவர் வைக்கோல் படப்பில் தீ வைத்து விட்டு சென்றார். இதனால் வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் அந்த வைக்கோல் படப்பில் கொளுந்து விட்டு எரிந்த தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்