திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா

திருவள்ளூர் :  திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பதவியேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ப.விஷ்ணுசரண்  தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவி அபிதா அனைவரையும் வரவேற்றார்.பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் விழாவினை ஒருங்கிணைந்து நடத்தினார்.விழாவில் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வெவ்வேறு துறைகளில் மாணவர் தலைவர், மாணவ துணைத் தலைவர், சமூக நலத் தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், பண்பாட்டுத்துறை தலைவர், இ.சி.ஓ சங்கத் தலைவர், டி.எப்.சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்து உரிய கொடிகளையும் அணிவித்தார்.மேலும் மாணவர்களின் பல்வேறு வகையான திறமைகளை வளர்க்கக் கூடிய பள்ளியின் நான்கு குடிகல்களான கங்கா, நர்மதா, கிருஷ்ணா, காவேரி குடில்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கும் பதக்கங்களையும், கொடிகளையும் வழங்கி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.மாணவிகளின் தலைவியாக பிளஸ் 1 மாணவி சந்தியாஸ்ரீ பதவியேற்றார். துணைத்தலைவராக 9 ம் வகுப்பு மாணவி கேத்தி பிரசன்னா பதவியேற்றார்.இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லோகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் ராகுல் நன்றி கூறினார்….

Related posts

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து