திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆண், பெண் இருபாலருக்கும் தடகளம், நீச்சல், பளுதூக்குதல், பூப்பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, கால்பந்து, டென்னிஸ் ஆகிய போட்டியில் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மற்றும் 25ம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள், 22ம் தேதி காலை 7 மணி முதல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வளைகோல் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் மேலும் 23ம் தேதி காலை 8 மணியளவில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பளுதூக்குதல் போட்டி, 23ம் தேதி காலை 7 மணியளவில் முகப்பேர் டென்னிஸ் விளையாட்டரங்கில் டென்னிஸ், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.மேலும் 25ம் தேதி காலை 8 மணியளவில் திருவெற்றியூர் பூந்தோட்ட தெரு அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பூப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் 19ம் தேதி மாலை 5 மணிவரை. மேலும், தகவல்களை பெற திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்