திருவள்ளூர் மாவட்டத்தில் வனப்பகுதி விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சர் பேட்டி

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் வனப்பகுதி 5 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வன அலுவலகத்தில் மரக்கன்றை நட்டு வைத்து பின்னர் பசுமை தமிழகம் திட்டத்திற்காக வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை பார்வையிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக முதல்வர் அறிவித்துள்ள பசுமை தமிழக இயக்கம் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். மாநிலத்தில் 23.38 சதவிகிதம் தற்போது வனப்பகுதியாக உள்ளது. இதை 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அதற்காக இரண்டு கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 5 சதவிகிதம் மட்டுமே வனப்பகுதியாக உள்ளது. எனவே இதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்