திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 7.5 கோடி அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்: ஏரியை ஆக்கிரமித்து இருந்த செங்கல்சூளை, மீன் பண்ணை ஆகியவற்றை அகற்றி, 7 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.தமிழகத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில்  பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி 356 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை, மீன் பண்ணை மற்றும் விவசாயம் செய்வதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, திருவள்ளூர் தாசில்தார் ஏ.செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் அருணா, வருவாய் அலுவலர் கணேசன், விஎஒ பூங்கொடி, கிராம உதவியாளர் கிரேஸ் ஆகியோர் நேற்று ஈக்காடு பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு 356 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், 150 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூலை அமைக்க 50 ஆயிரம் கற்கள் அறுத்து வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் மீன் பண்ணை அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.இதை தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்திருருந்த செங்கல் சூளைக்காக வைத்திருந்த கற்களை அகற்றினர். அதன் அருகே மீன் பண்ணைக்காக தோண்டப்பட்ட குட்டைகளையும் அப்புறப்படுத்தி, தடுப்புகளையும் அகற்றினர்.இதில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரியின் 13 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அரசு  நிலத்தின் மதிப்பு 7 கோடி எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து ஏரி முழுவதும் நடத்தப்படும் என தாசில்தார் ஏ.செந்தில்குமார் தெரிவித்தார்.பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு நீர் நிலைகள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டு வருகின்றது. திருத்தணி ஆர்டிஓ சத்தியா தலைமையில் பள்ளிப்பட்டு தாசில்தார் சரவணன் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு நீர் நிலைகள் மீட்பு பணியில் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதையொட்டி, பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணமராஜிகுப்பம் அருகே வாய்கால் புறம்போக்கை, அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்ட சுற்றி வேலி அமைத்தார். தகவலறிந்து பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், விஏஓ மணி, கிராம உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்றி,7 ஏக்கர் வாய்க்கால் அரசு நிலத்தை அதிரடியாக மீட்டனர். அதன் மதிப்பு 50 லட்சம் என கூறப்படுகிறது….

Related posts

தமிழ்நாட்டில் ஜுலை மாதம் முதல் மின்கட்டணத்தை 4.83% உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையில் 9 இணை இயக்குநர்கள் அதிரடி மாற்றம்