திருவள்ளூர் அருகே அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றப்பட்டது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெற்றப்பட்டது. அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 14.51 ஏக்கர் நிலங்கள் மற்றும்  12 கடைகள் ஆகியவற்றை மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பூட்டி இலாக்கா முத்திரையிட்டு சுமார் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வின்போது, வேலூர் இணை ஆணையர் சி.லட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி, பென்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்),  திருக்கோயில் செயல் அலுவலர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.  …

Related posts

பள்ளிப்பட்டு அருகே நள்ளிரவில் போதை ஆசாமி சிறுவனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

உணவில் புழுக்கள் இறந்துகிடந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரியாணி ஓட்டலில் திடீர் சோதனை

ஆடுகளை கண்டுபிடித்து தரும்படி கிராமம் முழுவதும் போஸ்டர்கள்: சென்னை அருகே பரபரப்பு