திருவலம் பொன்னையாற்றில் மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவலம்: திருவலம் பொன்னையாற்றில் மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவலம் அடுத்த குகையநெல்லூர் காலனி குடியிருப்புகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு அருகே உள்ள பொன்னையாற்றின் கரையோரங்களில் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதற்கான பாசனநீர் கிணறுகள் மற்றும் ஆற்றில் குடிநீருக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிலிருந்து குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தினமும் இரவு, பகலாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நிலத்தடிநீர் குறையும், குடிநீர் கிணறுகளில் நீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆற்றிலிருந்து அனுமதியின்றி டிப்பர், டிராக்டர்களில் மணல் அள்ளி வரும் மாபியாக்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் அவர்கள் போலீசாரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேல்பாடி போலீஸ ஸ்டேஷனில் நடந்தது போன்று சம்பவம் நடக்க வேண்டுமா?, எங்கள் மணல் வண்டிகளை தடுத்தால் மீண்டும் ஒரு தீக்குளிப்பு சம்பவம் நடைபெற வேண்டுமா? என மிரட்டுகின்றனராம்….

Related posts

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்