திருவரங்குளம் மகாசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

புதுக்கோட்டை,ஏப்.2: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கி நடைபெற்றது. தினமும் அம்பாளை சிம்ம வாகனத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள் வான வேடிக்கை மேளதாளத்துடன் ஊர்வலமாக இழுத்துச் சென்று வீதிகள் தோறும் பெண்கள் முத்தாலத்தி எடுத்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து காலை பால்குடம் எடுத்தல், கோயிலில் பால்காவடி, பறவை காவடி, 32 அடி அழகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக் குழியில் இறங்கி தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து