திருவனந்தபுரம் 26வது சர்வதேச திரைப்பட விழா

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா, வரும் மார்ச் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் கோவாவுக்கு அடுத்து திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இவ்விழா நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய 26வது சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் மார்ச் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை திரைப்பட விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 8 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் ஆப்கானிஸ்தான், மியான்மர், குர்திஸ்தான், வியட்நாம் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 180 படங்கள் திரையிடப்படுகின்றன. திருவனந்தபுரம் நிஷாகந்தி அரங்கில் மார்ச் 18ம் தேதி மாலை 6 மணியளவில்,கேரள முதல்வர் பினராய் விஜயன் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார்….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்