திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் 283 பேர் மனு-கலெக்டரிடம் வழங்கினர்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 283 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், ஆர்டிஓ மந்தாகினி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், சுய தொழில் கடனுதவி, சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 283 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.  ெதாடர்ந்து, கடந்த வாரங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில், அகில இந்திய ராஜகுலத்ேதார் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுள்ள சலவை தொழிலாளர்களை குறிக்கும் வண்ணார் எனும் சொல்லை நீக்கி, ராஜகுலத்தோர் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மக்கள் குறைதீர்வு கூட்டத்தின்போது, பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தவிர்ப்பதற்காக, வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்