திருவண்ணாமலையில் 19வது மாதமாக தடை கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து அனுப்பிய போலீசார்

*அண்ணாமலையார் கோயிலிலும் தரிசனத்துக்கு அனுமதியில்லைதிருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 19வது மாதமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி தடுப்புகள் அமைத்து கண்காணித்த போலீசார் தடை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும் அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழுகிறது அண்ணாமலையார் கோயில். நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவுரை கிரிவலத்துக்கான தடை மட்டும் நீங்கவில்லை.இந்நிலையில், தொற்று பரவல் 2வது அலையால் தொடர்ந்து 19வது மாதமாக, இம்மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டார்.புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த ேநரம் ேநற்று அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.  கிரிவல பாதை வழியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.  எப்போதும், பவுர்ணமி நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியிருக்கும் கிரிவலப்பாதை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.அதேபோல் அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று தடை விதிக்கப்பட்டது. எனவே, பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் கோயில் ராஜகோபுரம் எதிரே தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து கிரிவலத்துக்கு வரும் வாகனங்களை கண்காணித்து தடை செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

Related posts

சென்னையில் போலி இறப்பு சான்றிதழ் பெற்று கள்ளக்காதலியின் ₹20 கோடி சொத்தை அபகரித்த காதலன்: போலீசில் தாய் கண்ணீர் புகார்

பலத்த சூறாவளி காற்றால் ஊட்டியில் 50 மரங்கள் விழுந்தன: மஞ்சூர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு

தீபக் ராஜா கூட்டாளி போலீசில் திடீர் சரண்