திருவண்ணாமலையில் நிறைவு நாளன்று மகாதீபத்தை தரிசிக்க மலை மீது திரண்ட பக்தர்கள்: வனத்துறையினர் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் காட்சியளிக்கும் நிறைவு நாளான நேற்று, மலை மீது ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அதையொட்டி, கடந்த 6ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆன்மிக மரபுப்படி 11 நாட்கள் மலை மீது மகாதீபம் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி, 11வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்று காலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மலைமீது மகாதீபம் காட்சியளிக்கும் நிறைவு நாளான நேற்று மாலை மகாதீபம் ஏற்றும்போது, மலையில் இருந்து தரிசனம் செய்வதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலை மீது திரண்டனர். மகா தீபத்திருவிழா தினத்தன்று மலை மீது பக்தர்கள் செல்ல, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. 2,500 பேருக்கு மட்டும் புகைப்பட அனுமதி அட்டை வழங்கப்பட்டு, மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, மலைக்கு செல்ல எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எனவே, கடந்த 11 நாட்களும் மகாதீபத்தை தரிசிக்க மலைக்கு பக்தர்கள் சென்றனர்.நிறைவு நாளில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மலைக்கு சென்றதால், மலைப் பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை மலையில் இருந்து மகா தீபக்கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது….

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!