திருமுல்லைவாயல் பகுதியில் ரூ35 லட்சம் மதிப்பில் பூங்கா சீரமைப்பு: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

ஆவடி: திருமுல்லைவாயலில் ரூ35 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பூங்காவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.ஆவடி மாநகராட்சி 9வது வார்டு திருமுல்லைவாயல் தென்றல் நகரில் அமைந்துள்ள பூங்கா ரூ35 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, ஆவடி மேயர் ஜி.உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார். அப்போது அவர், `ஆவடி மாநகராட்சியை சுற்றி உள்ள பூங்காக்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்’  என்று கூறினார்.விழாவில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், 2வது மண்டல குழு தலைவர் அமுதா பேபிசேகர், 28வது மாமன்ற உறுப்பினர் அமுதா சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் சத்தியசீலன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்….

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி