திருமானூர் அருகே கரைவெட்டியில் நிரம்பி வழியும் பறவைகள் சரணாலய ஏரி

அரியலூர்: திருமானூர் அருகே கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி சீசனுக்கு முன்பே மழை நீர் வரத்தால் நிரம்ப துவங்கி யுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் ஏரியாக 1958ல் வெட்டப்பட்டு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக மேட்டு நிலங்களாக வானம் பார்த்த பூமியாக இருந்த திருமானூர் ஒன்றியத்திலுள்ள கிராமங்கள் வழியாக கொள்ளிடம் ஆறு அருகே சென்றாலும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்த நிலையை மாற்றிட முன்னாள் முதல்வர் காமராஜரால் திருச்சி மாவட்டம் முசிறி அருகே வாத்தலை கிராமத்திலிருந்து சமயபுரம்-புதூர் உத்தமனூர்- புள்ளம்பாடி வழியாக அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள மானோடை ஏரிக்கு காவிரி தண்ணீர் வந்ததும் நிரம்பியவுடன் வெங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டி ஓடை ஏரியில் நீர் நிரம்பி பிறகு கரைவெட்டி ஏரிக்கு நீர் வந்து நிரம்பியதும் இறுதியாக சுக்ரன் ஏரி நிரம்பி கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் வகையில் நீர்ப்பாசன திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் அண்மையில் பெய்த மழை நீரால் பட்டாணி ஓடை உள்ளிட்ட காட்டு ஓடைகளில் வந்த தண்ணீரால் கரைவெட்டி ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் கரைவெட்டி ஏரி சீசனுக்கு முன்பாகவே நிரம்பி வருகிறது. இதனால் குடிநீர் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும் வெளிநாட்டு பறவைகளும் முன் கூட்டியே வர ஆரம்பித்துள்ளது. ஏரியில் தங்கியிருக்கும் பறவைகள் தின்னும் பழங்கள் கொட்டைகளை எச்சம் மூலம் பரப்புவதன் மூலமாக மரம் செடி வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பதோடு பறவைகளின் எச்சம் பலமடங்கு நன்மை செய்யும் மண்புழு உரம் போல நீரில் கரைந்து வயல்வெளிகளுக்கு செல்லும் போது உயிர்ச்சத்து மிகுந்த உரமாகவும் பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்கு பயன் தருகிறது. கரைவெட்டி ஏரி தற்போது நிரம்பி வருவது அப்பகுதி விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

Related posts

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை