திருமாநிலையூர் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

 

கரூர், அக்.22: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் திருமாநிலையூர் சாலையில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், தாந்தோணிமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேரூந்தகளும் திருமாநிலையூர், சுங்ககேட் வழியாக சென்று வருகிறது.

இதில், திருமாநிலையூரைத் தாண்டியதும், பெட்ரோல் பங்க் அருகே காலை நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகளும், மற்ற சமயங்களில் நூற்றுக்கணக்கான மக்களும் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்துகளில் ஏறிச்செல்கின்றனர். ஆனால், இந்த பகுதியில் நிழற்குடை இல்லாத காரணத்தினால் வெயிலில் நின்றுதான் அனைத்து பயணிகளும் பேருந்துகளில் ஏறிச்செல்கின்றனர். எனவே, இதுபோன்ற பயணிகளின் நலன் இந்த பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி