திருமழிசை பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

 

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள மாவட்டம் நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான இயக்கம் என்ற பெயரில் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருமழிசை பேரூராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பேரணி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. பிறகு வீட்டையும், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து கலை நிகழ்ச்சிகளும், கண்காட்சியும், மழைநீர் கால்வாய்களை தூய்மை செய்யும் பணிகளும் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி தலைவர் வடிவேல், துணைத் தலைவர் மகாதேவன், செயல் அலுவலர் மாலா, உதவி பொறியாளர் சுபாஷினி, தூய்மைப்பணி மேற்பார்வையாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’