திருமழிசை பேரூராட்சியில் 197 சாலையோர வியாபாரிகளுக்கு ₹34 லட்சம் சுய தொழில் வங்கி கடன்

திருவள்ளூர், ஜூலை 7: தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களில் இணைக்கவும் பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி, தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி சுவாநிதி சம்ரிதி திட்டத்தின் கீழ், ஒருநாள் பயிற்சி முகாம் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மோட்டல் ஹைவே-யில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.ஜெயகுமார் பயிற்சி அளித்து பேசினார்.

இந்த முகாமில் திருமழிசை பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பேரூராட்சியின் மூலம் சுய தொழில் வங்கிக் கடன் முதல் தவணை ₹10 ஆயிரம் வீதம் 120 பயனாளிகளுக்கும், 2ம் தவணை கடன் ₹25 ஆயிரம் வீதம் 66 பயனாளிகளுக்கும், 3ம் தவனை கடன் ₹50 ஆயிரம் வீதம் 11 பயனாளிகளுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 110 சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏள்ள பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’