திருமழிசை, ஆவடி பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் வீடு தேடி சென்று மருத்துவ பெட்டகம்: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: திருமழிசை, ஆவடியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர்
ஆவடி நாசர் துவக்கிவைத்தார். திருமழிசை பேரூராட்சி பகுதியில் வீடு தேடி
தடுப்பூசி செலுத்தும் திட்ட முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான்
வர்கீஸ் தலைமை வகித்தார். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி வரவேற்றார். முகாமை, பால்வளத்துறை
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதார
துறை துணை இயக்குநர் செந்தில்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்
சா.கண்ணன், செயல் அலுவலர் கோ.சதீஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பூவை
எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, நகர செயலாளர்கள் பூவை எம்.ரவிக்குமார்,
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், திமுக நிர்வாகிகள்
உ.வடிவேல், கருணாநிதி, தி.கோ.செல்வம், மு.குமார், வி.எம்.நாகதாஸ்,
பி.அருள், ஆர்.கருணாநிதி, மு.சுரேந்தர், எழிலரசன், இளங்கோவன், ஜான்மேத்யூ,
நாகராஜ், சதீஷ், ஜெயகுரு, டி.கே.வேலு, மோகன், சீனிவாசன், வெங்கடேசன்,
முத்து, ஜெய், எட்டியப்பன், நவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பூந்தமல்லி நகராட்சி சிப்பாய் நகர் பகுதியில் மக்களை தேடி மருத்துவம்
திட்டம் மூலம் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்றுமருந்து
பெட்டகங்களையும் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்.ஆவடி:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆவடி மாநகராட்சியில்
மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்திற்கான வாகனங்களை துவக்கிவைத்தல்,
பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்குதல்
உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான்
வர்கீஸ் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்
கலந்துகொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான வாகனங்களை
துவக்கிவைத்து வீடுகளுக்கு நேரடியாக சென்று பயனாளிகளுக்கு மருந்து
பெட்டகங்களை வழங்கினார். இதில் பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குனர்
டாக்டர் செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அசின்,
மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜாபர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்
பிரதீபா ஆகியோர் கலந்துகொண்டனர்….

Related posts

எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்