திருமலை பக்தர்கள் கவனத்திற்கு!: டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு வர முடியாதவர்கள் வேறு தேதியில் வரலாம்..கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

ஆந்திரா: திருப்பதியில் பெய்த கனமழையால் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் வேறு தேதி மாற்றி தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின் பேசிய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி, அலிபரி வழித்தடத்தில் நடைபாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். நவம்பர் 18ம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் இருந்தும் கனமழை காரணமாக வரமுடியாத பக்தர்கள் அதே டிக்கெட்டை பயன்படுத்தி வரும் 30ம் தேதி வரை தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேலும் நவம்பர் 30 வரை வர முடியாதவர்கள் 6 மாதங்களுக்குள்ளாக தரிசனம் செய்யும் விதமாக இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்