திருமயம் அருகே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட விளக்க கண்காட்சி

 

திருமயம்,ஆக.23: திருமயம் அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சாதனை புகைப்பட விளக்க கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் விவசாயி, குடும்பத் தலைவி, மீனவர்கள் கூலித்தொழிலாளிகள், தனியார், அரசு நிறுவனங்களின் பணி புரியும் பெண்கள் உள்ளிட்ட பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நல திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு செய்தி வருகிறது.

உதாரணத்திற்கு மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மகளிருக்கான இலவச பஸ் போக்குவரத்தை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு தேவையான உதவிகள், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க, அனைவரும் உயர்கல்வி செல்ல தொகுதிக்கு ஒரு கல்லூரி என பல்வேறு திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் மகளிர் காண உரிமை தொகை திட்டமும் அமல்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இது போன்ற தமிழக அரசின் மக்கள் நல திட்ட பணிகள், சாதனைகளை கிராம மக்களும் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது.இதனை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கண்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதன் மூலம் கிராம மக்கள் தமிழக அரசின் திட்டங்கள் அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்