திருமண வாழ்க்கை பிடிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை

ஆவடி: ஆவடி, டிரைவர்ஸ் காலனி, 4 வது தெருவை சேர்ந்தவர் அகிலன் (27). இவர், கிண்டியில் உள்ள குடிநீர் வாரியத்தில் தற்காலிக ஊழியர்.  இவருக்கும்,  உறவினரான வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், 28வது பிளாக்கை சார்ந்த ரோனிஷா (22) என்பவருக்கும், கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரோனிஷா அண்ணாநகரில் தனியார் கல்லூரியில் எம்.காம் 2 ம் ஆண்டு படித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு, இவர் தனது கணவர் மற்றும் மாமனார் குணசீலன், மாமியார் மீனா ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும், ரோனிஷாவின்  நாத்தனார் சிலம்பரசி வீட்டு மேல் தளத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார்.குணசீலன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். மீனா, சென்னை, எழிலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை குணசீலன் வெளியே சென்று விட்டார். பின்னர், மீனா, அகிலன் ஆகியோரும் வேலைக்கு சென்று விட்டனர். ரோனிஷா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர், சுமார் 11.30மணி அளவில் சிலம்பரசி கீழ் தளத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு ரோனிஷா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து, சிலம்பரசி அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் ரோனிஷாவிற்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை. இதனால், திருமணமான நாள் முதல் விரக்தியில் இருந்து உள்ளாராம்.  இ்ந்நிலையில் ரோனிஷா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு