திருமண மண்டபத்திற்கு தடை விதிக்கக்கோரி மனு 1957 முதல் செயல்படும் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

மதுரை, ஆக. 31:மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த வக்கீல் முத்தமிழ்செல்வன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது இருதய பாதிப்பிற்காக அழகரடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதன் அருகே நடுநிலைப்பள்ளி மற்றும் இல்லத்து பிள்ளைமார் சங்கத்தின் பொன் விழா மண்டபம் உள்ளது. இங்கு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கிகளில் பாடல்களை ஒலிபரப்புகின்றனர். அடிக்கடி அதிக சத்தத்துடன் தொடர்ந்து வெடிக்கக் கூடிய தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கின்றனர்.

இதனால் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. பல நேரங்களில் வெடித்த பட்டாசுகள் பள்ளி மற்றும் மருத்துவமனைக்குள் வந்து விழுகின்றன. இது என்னைப் போன்ற இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. இதோடு திருமண மண்டபத்திற்கு வருவோர் தங்களது வாகனங்களை சாலையை மறித்து ஆங்காங்கே இடையூறாக நிறுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்களும், ஆம்புலன்சும் சுலபமாக வந்து செல்ல முடியவில்லை. மண்டபத்தில் பார்க்கிங் வசதி இல்லை.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை