திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகளில் வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக பொருட்களை தரம் பிரித்து பேக்கிங் பணியில் அரசு அலுவலர்கள் தீவிரம்

கரூர், ஏப். 17: வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக பொருட்களை தரம் பிரித்து பேக்கிங் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் 19ம் தேதி நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தை நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை ஒவ்வொரு தொகுதிக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் இருக்க வேண்டும். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர் ,மணப்பாறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் அடங்கும்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் 693730 ஆண் வாக்காளர்களும், 735970 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 90 உள்பட மொத்தம் 1429790 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 1495 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. தற்போது நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் 1495 வாக்குச்சாவடி மையங்கள் தயாராக உள்ளன.

மேலும் மண்டல நிலையிலான அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீசார் தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் மூலம் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது,
மேலும் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பளார்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியும் முடிவுற்று அனைத்து மின்னணு இயந்திரங்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களின் பாதுகாப்பு அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் நாளை (18ம் தேதி) மதியம் முதல் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்நிலையில் வாக்குசாவடி மையங்களில் அலுவலர்கள் மூலம் பயன்படுத்தப்படவுள்ள படிவங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அழியாமை மற்றும் பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷனரி பொருட்களை தரம் பிரித்து பேக்கிங் செய்யும் பணியில் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்