திருமண நிகழ்ச்சியில் போதையில் ஆட்டம் காதை கிழித்த பாட்டுச் சத்தம் தட்டிக்கேட்ட போலீசுக்கு அடி: ஜீப்பை தாக்கி சேதம்

திருமலை: தெலங்கானாவில் கொரோனா தொற்று பாதித்த பகுதியில் அதிக பாட்டு சத்தத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி அட்டகாசம் செய்ததை தட்டிக் கேட்ட போலீசாரை தாக்கி, ஜீப்பும் உடைக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், செர்குப்பள்ளி கிராமத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ேடாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 15ம் தேதி இரவு போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அங்கு அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பி பலர் போதையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்று ‘அரசு உத்தரவை மீறி இவ்வளவு பேருடன் சமூக இடைவெளியின்றி திருமண வரவேற்பை நடத்தலாமா?’ என  கேட்டனர். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்த ஸ்பீக்கர் பாக்சுகளை பறிமுதல் செய்து ஜீப்பில் ஏற்றினர். அப்போது, மதுபோதையில் இருந்த சிலர், ஆவேசமடைந்து போலீசாரை சரமாரி தாக்கினர். போலீஸ் ஜீப்பையும் தாக்கி உடைத்தனர். இதில், பயிற்சி எஸ்.ஐ. கல்யாண் குமார் படுகாயமடைந்தார். மற்ற போலீசார் லேசான காயத்துடன் தப்பினர். இது தொடர்பாக நல்கொண்டா எஸ்.பி ரங்கநாத் நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரித்தார். பின்னர், போலீசாரை தாக்கி ஜீப்பை உடைத்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்….

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்