திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது

திருத்தணி: திருத்தணியில் பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியை சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி(21), ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர், திருத்தணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பிறகு வழக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கிருஷ்ணமூர்த்தி கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணமூர்த்தியும், மாணவியும் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். மாணவியை கடத்திச் சென்ற வழக்கில், கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு

ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி