திருமங்கலம் அருகே ரூ.4.36 லட்சத்தில் மண்புழு உரக்கூடம், குப்பைகள் தரம் பிரிக்கும் மையம்: விரைவாக நடைபெறும் சீரமைப்பு பணிகள்

திருமங்கலம், ஏப். 4: திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பஞ்சாயத்தில் ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம், உரக்குழி மற்றும் குப்பை தரம்பிரிக்கும் கூடாரம் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.திருமங்கலம் நகருக்கு மிக அருகேயுள்ள பஞ்சாயத்துகளில் ஒன்று மேல்கோட்டை கிராமம். மேலக்கோட்டை, தமிழ்நாடு ஹவுசிங்போர்டு காலனி ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய இந்த கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிராமத்தினை சுற்றி விளைநிலங்கள் அதிகளவில் இருப்பதால் பஞ்சாயத்து சார்பில் இயற்கை உரங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவருடன் உரக்குழி அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பஞ்சாயத்தில் மக்களிடம் வீடுகளில் பெறப்படும் குப்பைகளை எரியூட்டுவதை தவிர்த்து குப்பைகளை தரம்பிரிக்க ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் குப்பை கூடாரம் மராமத்து செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 15வது நிதிக்குழு மானியத்தில் நடைபெறும் இந்த பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன்படி ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணிகள் அனைத்து முடிவடைந்தால் இயற்கை உரங்கள் அதிகளவில் கிடைக்கும். குப்பைகள் தேங்கி சுற்றுச்சூழல் பாதிப்பதும் குறையும் என்கின்றனர் பஞ்சாயத்து நிர்வாகத்தினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை