திருமங்கலம் அருகே சிறுமி திருமண வழக்கில் கொலையான கணவர் உள்பட 6 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

திருமங்கலம், ஆக. 6: திருமங்கலம் அருகே சிறுமி திருமண வழக்கில் கொலை செய்யப்பட்ட கணவர் உள்பட 6 பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலராக பணிபுரிந்து வருபவர் டயானா. இவர் மாவட்ட கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று திருமங்கலம் தாலுகா ஸ்டேஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமியை விசாரணை நடத்தினார். இதில் அச்சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சந்தனகருப்பு என்பவரது கொலையில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சிறுமியை சின்னஉலகாணியை சேர்ந்த சந்தனகருப்பு என்பவருக்கு அவரது தந்தை மகாலிங்கம், தாய் பேச்சியம்மாள், சிறுமியின் தந்தை ஜெயசங்கர், தாய் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்போது சிறுமிக்கு 13 வயது எனவும், கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததாகவும், திருமணத்திற்கு பின்பு தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சிறுமிக்கும், கணவர் சந்தனகருப்பிற்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்படவே பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டதாகவும, அங்கிருந்து திருமங்கலத்தில் வேலைக்கு சென்ற போது காளீஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் மூலமாக 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன்னை அழைத்து போக தாய் வீட்டிற்கு வந்த கணவர் சந்தனகருப்பின் கண்ணில் மிளகாய் பொடி தூவி விரட்டி விட்டுள்ளதாகவும், அப்போது அங்கு வந்த சந்தனகருப்பின் தந்தை மகாலிங்கத்திற்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டதாகவும், மகாலிங்கம் தள்ளிவிட்டதில் சந்தனகருப்பு தலையில் அடிப்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தார். இத்தகவலையறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் டயானா அளித்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் கொலை செய்யப்பட்ட சந்தனகருப்பு, காதலன் காளீஸ்வரன் மற்றும் இருதரப்பு பெற்றோர் என 6 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு