திருமங்கலம் அருகே சரிந்து விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பம்: விரைந்து மாற்ற மக்கள் கோரிக்கை

 

திருமங்கலம், அக். 7: திருமங்கலம் அருகே சமத்துவபுரத்திலிருந்து அரசபட்டி செல்லும் மெயின்ரோட்டின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம், எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் ரோட்டில் விபரீதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தினை மாற்றி சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருமங்கலம் அருகேயுள்ள சமத்துவபுரத்திலிருந்து அரசபட்டி வழியாக கொக்குளத்திற்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக அரசபட்டி, வளையபட்டி, திருமால், கல்லணை, தூம்பக்குளம், டி.கொக்குளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சென்று வருகின்றனர். டவுன்பஸ், டிராக்டர் மற்றும் டூவீலர்கள் அதிகளவில் சென்று வரும் இந்த ரோட்டில், அரசபட்டி அருகே சாலையோரத்தில் அமைந்துள்ள மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

மின்வயர்களுடன் எந்த நேரத்தில் கீழே விழும் என்ற நிலையில் காட்சிதரும் இந்த மின்கம்பத்தினால் இந்த பகுதியில் செல்லும் வாகனோட்டிகள், கால்நடை வளர்ப்போர் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மின் வாரியத்தினர் ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தினை அகற்றிவிட்டு புதிதாய் அமைக்கவேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை