திருப்போரூர் தெற்கு மாடவீதியில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் தெற்கு மாடவீதியில் காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், ஏராளமான வழக்கறிஞர் அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள தெரு மின் விளக்கு கம்பம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதை மாற்றக்கோரி, திருப்போரூர் மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, மின்வாரிய அதிகாரிகள் மிகவும் சேதமடைந்திருந்த மின் கம்பத்தை மாற்றுவதாக உறுதி அளித்தனர்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் மின் கம்பம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து, விசாரித்தபோது, புதிய மின் கம்பம் இருப்பு வந்தவுடன் மின் கம்பம் மாற்றப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் மின் கம்பத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து கான்கிரீட் கற்கள் உடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளதால், மின் வாரிய நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, சேதமடைந்த மின் கம்பத்தை புதியதாக மாற்றிட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு