திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம்: நிகழ்ச்சி நிரல் வெளியீடு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவம் வரும்  7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 13ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மாசி பிரமோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அருகே திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரம்மோற்சவம் 13 நாட்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு மாசி பிரம்மோற்சவ விழாவை நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் இந்துசமய அறநிலையத்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து பிரம்மோற்சவ விழாவை சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரம்மோற்சவ விழாவை பாதுகாப்புடன் நடத்த, அனைத்து துறை ஆலோசனை கூட்டம் கடந்த வாரம்  நடந்தது. இந்நிலையில், மாசி பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 7ம் தேதி காலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா, 8ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு பூதவாகன வீதி உலா, 9ம் தேதி காலை புருஷாமிருக உபதேச உற்சவம், இரவு வெள்ளி அன்னவாகன வீதி உலா, 10ம் தேதி ஆட்டுக்கடா வாகன உற்சவம், இரவு வெள்ளி மயில் வாகன வீதிஉலா. 11ம் தேதி பகலில் மங்களகிரி உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு. 12ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு யானை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கிறது.விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 13ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 14ம் தேதி காலை வெள்ளித்தொட்டி உற்சவம், மாலை 5 மணிக்கு ஆலத்தூர் கிராமத்துக்கு முத்துக்குமாரசாமி எழுந்தருளி பரிவேட்டை, இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா. 15ம் தேதி காலை விமான உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வீதிஉலா, 16ம் தேதி காலை வெள்ளித்தொட்டி உற்சவம், பகல் 12 மணிக்கு சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி உற்சவம், மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 17ம் தேதி மாலை கிரிவல உற்சவம், இரவு பந்தம்பரி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 18ம் தேதி மாலை வேடர்பரி உற்சவமும், இரவு முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவமும், பிப்ரவரி 19ம் தேதி காலை 7.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் மணக்கோலத்தில் முருகப் பெருமான் வீதிஉலா நடந்து பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சி, ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் செய்கின்றனர். * சாலை சீரமைக்கும் பணி மும்முரம்திருப்போரூரின் நான்கு மாடவீதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, புதிய சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. தமிழக அரசின் உத்தரவின்படி பொக்லைன் இயந்திரம் மூலம் பழைய சிமென்ட் சாலை முழுவதுமாக அகற்றப்பட்டு புதிய சாலை அமைக்கப்படுகிறது….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்