திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர், செப். 25: திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தெருநாய்கள் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தெரு நாய்கள் பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் குறித்து சமந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி. பல்லடம், பொங்கலூர், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மூலனூர், வெள்ளகோவில், குண்டடம், மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலைமையிட கால்நடை மருத்துவமனைகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் போர்கால அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், போர்கால அடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் அரசன் (தாராபுரம்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலை) நகராட்சி நிர்வாகம் மண்டல இணை இயக்குநர் இளங்கோ, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு. புகழேந்தி. துணை இயக்குநர் மரு. அரங்கபிரகாசம், உதவி இயக்குநர்கள் மரு. செந்தூர் செல்வம், மரு. ஜெயராமன், மரு. தென்கார்த்திகை, மரு.க .பரிமளராஜ்குமார், உள்ளாட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சின்னச்சாமி, உணவக உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சாமிநாதன். கால்நடை உதவி மருத்துவ சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு