திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

 

திருப்பூர், அக். 10: திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் வரும் 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண இருக்கிறார்கள்.

எனவே, இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். அதன்படி, சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சூரியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன சங்கம், வேலப்பநாயக்கன்வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், துங்காவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ மற்றும் சேவை மையம், கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,

மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விருமாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை