திருப்பூர் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்

 

திருப்பூர், டிச.29: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முகாம்கள் நடந்து வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 29, சௌடாம்பிகை கல்யாண மண்டபம், புதிய பஸ் நிலையம் அருகே வார்டு எண் 22, செங்குந்தர் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, ராதாகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகி திலக்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்