திருப்பூர் அடகு கடையில் கொள்ளை போன 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி ரூ.15 லட்சம் மீட்பு-நகரில் 1200 சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் முடிவு

திருப்பூர் : திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என். காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவர் தன் வீட்டின் முன் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அடகு கடையில் கடந்த 3ம் தேதி இரவு புகுந்த கும்பல் 3 கிலோ 250 கிராம் தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி, ரூ.15 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியோடியது.  இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடினர். இதில்  4 பேர் கொண்ட கும்பல் திருப்பூர் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறி வடமாநிலம் தப்பியது தெரிய வந்தது. பின்னர் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மகாராஷ்டிரா பல்லர்பூர்நகரம் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் இறங்கியது தெரிந்தது. அவர்களை அம்மாநில போலீசார் உதவியுடன் பிடித்து அவர்களை திருப்பூர் கொண்டு வந்தனர். நகைகள் பணம் மீட்கப்பட்டது. கைதான பீகார் மாநிலத்தை சேர்ந்த மாதப் ஆலம் (37), பத்ரூல் (20), முகமது சுபான் (30), திலாகஸ் (20) நேற்று திருப்பூர் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 3 கிலோ 250 கிராம் தங்க நகை, 28 கிலோ வெள்ளி, ரூ.15 லட்சம் ஆகியவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் ஏஜி பாபு நேற்று பார்வையிட்டார்.தொடர்ந்து விசாரணைக்கப்ப பிறகு இவை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.  இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘திருப்பூரில் குற்றச் சம்பவம் தடுக்க வெளிமாநில தொழிலாளர் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 25ஆயிரம் பேரின் விவரம் உள்ளது. 440 இடங்களில் 1200 சிசிடிவி கேமரா பொருத்தி குற்றச் செயல் தடுக்கப்படும்’ என்றார். …

Related posts

உத்திரப்பிரதேசத்தில் கால எந்திரம் மூலம் இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி!!

விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!!

சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல்!!