திருப்பூரில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பூர்,ஜூலை9:திருப்பூர் மாநகராட்சி, வெற்றி அமைப்பு மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சார்பில், திருப்பூர் மாநகரை பசுமையாக்க 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.முதற்கட்டமாக மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 75 ஆயிரம் மரங்கள் வளர்க்கும் பசுமை விழா நேற்று திருப்பூர் நடராஜ் தியேட்டர் ரோடு ஆலங்காடு பிரிவில் நடந்தது. இதில் மரக்கன்றுகளை திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் குமார் துரைசாமி, மண்டல தலைவர் உமா மகேஷ்வரி, தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ்,மு.க.உசேன் மற்றும் கவுன்சிலர்கள் செந்தில்குமார், திவாகரன், ராதாகிருஷ்ணன், நாகராஜ், சாந்தாமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் எம்.எல்.ஏ.,மேயர் தொடங்கி வைத்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்