திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

 

திருப்பூர், டிச.29: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்டு பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை, வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளார் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்