திருப்பூரில் யார்னெக்ஸ் கண்காட்சி துவங்கியது

 

அவிநாசி,செப்.29: திருப்பூர் ஐகேஎப் வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறும் 27வது யார்னெக்ஸ் கண்காட்சி, 15வது டக்ஸ் இந்தியா கண்காட்சி மற்றும் 2வது டைகெம் கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார்துரைசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் இணை செயலாளர் குமார்துரைசாமி ஆகியோர் கூறுகையில், ‘‘இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 184 முன்னணி எம்பிராய்டரி இம்போர்ட்டட ளிப்பாட்டம் வெயிட் பிரிண்டட் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

பைபர்களில் இயற்கை இரகம் பருத்தி, கம்பளி, பட்டு, பிளாக்ஸ்சீராமி, செயற்கை ரகத்தில் ஜெனரேட்டட் மற்றும் சிந்தடிக், இவை தவிர சிறப்பு வகைகள். யார்ன்களில் இயற்கையானவை மற்றும் பிளெண்டுகள் (பருத்தி. கம்பளி, பட்டு, லினன்), எலாஸ்டிக், பேன்சி மற்றும் ஸ்பெஷால்டி ஆடை துணிரகங்களில் ப்ராசஸ்டு, சில்க், ஸ்பெஷால்டி வெல்வெட் வுலன் மில்கள், டையிங், பிரிண்டிங். பேப்ரிக் பிராஸஸிங் முதலான சேவைகளையும் இந்த நிறுவனங்கள் தங்களது அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், அப்பேரல் பிராண்டுகள், இறக்குமதியாளர்கள், பேஷன் டிசைனர்கள், பேஷன் லேபிள்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலான தங்கள் நிறுவனங்கள் சார்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு