திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச மகளிர் தினவிழா

திருப்பூர் :  திருப்பூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.சர்வதேச மளிர் தின விழாவையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம், கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மற்றும் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சிஎஸ்இடி) சார்பில், ‘ஏற்றமிகு பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு என்ன தேவை? யார் பொறுப்பு’ என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் சொற்றொடர் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓவியப்போட்டியில் 73 மாணவிகளும், பேச்சுப் போட்டியில் 20 மாணவிகளும், சொற்றொடர் போட்டியில் 37 மாணவிகளும், கட்டுரைப் போட்டியில் 145 மாணவிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு, குமரன் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் புனிதா வரவேற்றார். சிஎஸ்இடி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் கருத்துரையாற்றினார். அவிநாசி அரசு கலைக் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் பாலமுருகன், ஆங்கிலத்துறைத் தலைவர் தாரணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பேசினார்கள். சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் நடைபெற்றது. அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியைகள் நசீரா, முஸ்தாக் ஆகியோர் வாழ்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக ஓய்வுப்பெற்ற செவிலியர் சரோஜா சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து சிறப்பாக சேவை செய்து வரும் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி பவானிக்கு சர்வதேச மகளிர் தினம் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்