திருப்பூரில் திமுக மேற்கு மண்டல நெசவாளர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்

 

திருப்பூர், நவ.17: திருப்பூரில் திமுக மேற்கு மண்டல நெசவாளர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கோவையில் வரும் 20-ம் தேதி கைத்தறி கண்காட்சி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மேற்கு மண்டல நெசவாளர் அணி மாவட்ட, மாநகர, தலைவர், துணைத்தலைவர் மற்றும் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நெசவாளர் அணி மாநில தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் சச்சிதானந்தம் வரவேற்றார்.

மாநில செயலாளர்கள், துணை தலைவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வாழ்த்து பேசினார். முடிவில் தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு, கோவை தெற்கு, வடக்கு, மாநகர், ஈரோடு வடக்கு, தெற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்தியம், தர்மபுரி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,

மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோவை கவுண்டம்பாளையத்தில் வரும் 20-ம் தேதி கைத்தறி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை மக்கள் பயன் பெறும் வகையில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்