திருப்பூரில் கலை இலக்கிய சபை விழா

திருப்பூர்,ஏப்.7: திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், குறிஞ்சி மகளிர் அமைப்பு சார்பில் திருப்பூரில் மகளிர் இலக்கிய சபை என்ற நிகழ்ச்சி நடந்தது. மாணவி மேகா பிரியதர்ஷினி எழுதிய மலர் தேவதைகள் மற்றும் ஆசிரியர் மணிகண்ட பிரபு எழுதிய ஓ.டி.பி. புத்தகங்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன் வெளியிட்டார். இதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருப்பதி முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் பார்வதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அயலி வெப் சீரிஸ் குறித்து எழுத்தாளர் வதனி பிரபு விரிவாக பேசினார். குப்பை மேலாண்மை செய்வது குறித்து துப்புரவாளன் அமைப்பின் மோகன்குமார் விளக்கினார். துப்பட்டா போடுங்க நூலினை அறிமுகம் செய்து வைத்து கலைவாணி பேசினார். திருப்பூர் மாவட்ட அளவில் கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்ற மாணவி யாழினி மற்றும் ஓவிய கலைஞர் அருண்குமார் ஆகியோர்களை பாராட்டி கவுன்சிலர் பிரேமலதா பரிசு வழங்கினார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி