திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

 

திருப்பூர், ஜூலை 5: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நடைபெற்றது. இதற்கு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக திருப்பூர் கிளை லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

பொருளாளர் செல்வராஜ் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் பில் தொகையை 45 நாட்களுக்குள் பெறலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க உற்பத்தியை மேம்படுத்த பயிற்சி மையம் ஆரம்பித்து, மற்ற அமைப்புடன் சேர்ந்து செயல்படுவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை