திருப்புவனத்தில் பசுந்தாள் உர விதை விநியோகம் துவக்க விழா

திருப்புவனம், ஜூன் 23: முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பசுந்தாள் தக்கைப்பூண்டு விதை பயிரிட விவசாயிகளுக்கு 20 கிலோ 50 சதவிகித மானியத்தில் வழங்கும் துவக்க விழா நேற்று திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சின்னையா தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் விவசாயிகளுக்கு தக்கைப் பூண்டு விதை விநியோத்தை துவக்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமி பிரபா, வேளாண்மை தரக்கட்டுப்பாடு இணை இயக்குநர் பரமேஸ்வரன்,வேளாண்மை அலுவலர் கலைவாணி, துணை அலுவலர் முனியசாமி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை